வாசுதேவநல்லூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிக்குளத்தை சேர்ந்த நபர்
nஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை தென்காசி பகுதிகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடராமல், தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.