தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரிக்கையை வலியுறுத்தி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி பண்ணாடி, கடையன், பள்ளன், வாத்தியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட ஏழு பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற ஒற்றை பெயரில் அறிவிக்க அரசாணை வெளியிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரசாணை கிடைக்கும் வரை கருப்பு சட்டை போராட்டம் நடைபெரும் என அறிவித்திருந்தனர்.அதன் தொடர்ச்சியாக 24.07.20 இன்று கருப்பு சட்டை அணிந்து 258ஆவது நாளை முன்னிட்டு, தேவேந்திர குல வேளாளர் அரசாணை
கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் நான்குநேரி ஓன்றியம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், ஒன்றிய செயலாளர்ஜெபாபாண்டியன் தலைமையில்மூலக்கரைப்பட்டி பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகமாநில துணைப் பொதுச் செயலாளர்நெல்லையப்பன்கலந்து கொண்டார். மாநில செய்தி தொடர்பாளர்சண்முக சுதாகர் கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்.இதில் கண்மணி மாவீரன்மாவட்ட தலைவர், நாகராஜசோழன்மாநகர் மாவட்ட செயலாளர், துரைப் பாண்டியன் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர், மகேந்திரன்தொழிற்சங்க பொது செயலாளர்,மகேஷ்மேற்கு மாவட்ட செயலாளர், முருகன் மாநகர் மாவட்ட பொருளாளர், மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்தங்கராஜ் பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்கிங்தேவேந்திரன்,நான்குநேரி ஓன்றியதலைவர்பொன்ராஜ், சுதாகர்நான்குநேரி ஒன்றிய இணைச் செயலாளர், டேவிட் பாண்டியன்ஒன்றிய மாணவரணி செயலாளர், யாபேஸ் பாண்டியன்பாளை ஒன்றிய இளைஞரணி தலைவர், பரமசிவ பாண்டியன்(பாளை ஒன்றியம்)உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.