திருநெல்வேலி திருமண்டலத்தில் சி.எஸ்.ஐ சேகர குருக்கள் மாறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சுரண்டை சி.எஸ்.ஐ சேகர குருவாக டி.கே ஸ்டீபன் பொறுப்பேற்றார்.பிரதம பேராயர் ரஸ்லாம் தர்மராஜ் உத்தரவின் படி இந்நிகழ்ச்சி பிரதம பேராயரின் ஆணையாளர் திருச்சி பிஷப் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. இதில் சினாட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கமிட்டியின் செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவின், உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் படி பாளை ஜவஹர் நகர் சேகரத்தில் பணியாற்றிய அருள் திரு.டி.கே ஸ்டீபன் புதுச்சுரண்டை சேகர குருவாக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சேகர மூப்பர்கள் ஏஎஸ்ஏஆர் பாலச்சந்திரன், அன்னப்பிரகாசம், ஜேக்கப் ராஜ்குமார், ஸ்டீபன் ஜெபராஜா, பால்ராஜ், ரூஸ்வெல்ட், சாலமோன், தனபால் ராஜசேகர், ஜேம்ஸ், தினகரன், கிருபாகரன், விக்டர், சாம், ஜான்சன், ஜெயசந்திரன், பிரகாஷ், சசிகுமார், மைக்கேல், தமிழரசன், கிருபா மான்சிங், சபை ஊழியர்கள் ஜான், பால் செல்லத்துரை, எலிசா பிரான்ஸிஸ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.