திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் சுகாதார அலுவலர் அரசகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், செவிலியர் கலாவதி, கோகிலா, மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகர் பகுதிகளில், கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறப்புக்குழு அமைத்து வீடுகள் தோறும், மருத்துவ பரிசோதனை மற்றும் கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நெல்லை மாநகராட்சியில் உள்ள திருநெல்வேலி, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் வீடு வீடாக பரிசோதனை செய்கின்றனர். இதற்காக சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் வீடு, வீடாகச்சென்று காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளதா, என ஆய்வு செய்வதோடு, தெர்மல் ஸ்கேனர், மூலம், காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். மேலும், pulse oxy meter மூலம் மூச்ச திணறல் உள்ள நபர்கள் கண்டறிய படுகின்றனர். மேலும் குடும்பத்திலுள்ள நபர்கள், முதியவர்கள், சர்க்கரை வியாதி, இருதய பிரச்னை உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர்.அனைத்து வீடுகளிலும், மொபைல் எண்களுடன் முழு தகவல்கள் பெறப்படுவதோடு, கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பராமரித்தல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா குறித்த விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா தொற்று குறித்து ஆய்வுப்பணி, மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் சிறப்புக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகப்படும் படியான நபர்கள் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுகின்றனர். மாநகராட்சி வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.