சுகாதாரமற்ற நிலையில் செம்பட்டி பேருந்து நிலைய பொது கழிப்பறை

செம்பட்டி பேருந்து நிலையம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்த பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. இப்பேருந்து நிலையத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.செம்பட்டியில் ஐந்து நிமிடம் நிற்காமல் எந்த பேருந்துகளும் செல்வதில்லை. தொலைதூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சிறிது இளைப்பாறுவதற்க்கும், கழிப்பறைக்கு செல்வதற்கும் வசதியாக இப்பேருந்து நிலையம் உள்ளதால் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக கழிப்பறையை பராமரிக்காமலும் சுத்தம் செய்யாமலும் இருந்த காரணத்தால் பொதுமக்கள் திறந்த வெளிக்கழிப்பறையாக தொடர்ச்சியாக பல மாதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.இதில் குறிப்பாக இப்பேருந்து நிலையத்திற்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை நாள்தோறும் அனுபவிக்கிறார்கள்.

பேருந்து நிலையம் முழுவதும் எங்கு பார்த்தாலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கும் நகலை உள்ளது.எனவே, நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்து முறையாக பராமரிப்பதோடு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வெஸ்டர்ன் கழிப்பறை வசதியையும் ஏற்படுத்தி தருமாறு TARATDAC-சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!