வீ.கே.புதூரில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி மா. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில், போலீசார் தாக்கியதால்  இறந்ததாக கூறப்படும் குமரேசனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வீரகேரளம்புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த குமரேசன் கடந்த மாதம்  நிலம் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் குன்றி  கடந்த மாதம் குமரேசன் இறந்தார்.

அவரது இழப்பை தொடர்ந்து குமரேசனின் குடும்பத்திற்கு,  25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீரகேரளம்புதூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், முத்துப்பாண்டியன், ராஜகுரு, கணபதி, விவசாய அணி செயலாளர் சங்கரன், வீரகேரளம்புதூர் கிளை செயலாளர் மாரியப்பன், குருசாமி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!