சுரண்டை பகுதியில் சாலைகளை விரைந்து சீரமைத்திட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்…

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டிலுள்ள அனைத்து சாலைகளிலும் புதிதாக இணைக்கப்பட்ட குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிமெண்டால் மூடப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. அனைத்து பகுதிகளிலும் விரைந்து செப்பனிட வேண்டும் என தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் சாலையின் மேல்புறம், சிவகுருநாதபுரம், பழைய மார்க்கெட், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, மகாலட்சுமி மருத்துவமனை, ஐஓபி ஏடிஎம்,  ரூம் பேரூராட்சி பயணியர் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மற்றும் ஷாப்பிங் காம்பளக்ஸ் காய்கனி கடைகளுக்கு சென்று வரும் சாலையில் பல இடங்களில் குழி உள்ளது. நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் நடந்து வருகின்றனர்.

சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எழும் நிலையில் உள்ளது. இதே போன்று பல சாலைகள் உடைந்து உள்ளன. ஆகவே தென் வடல் சாலையை செப்பனிட்டு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருவதுடன் பிற சாலைகளிலும் உடைந்த பகுதிகளின் ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் பொது நலன் கருதி காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!