வீரகேரளம்புதூரில் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் குமரேசனின் குடும்பத்திற்கு டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில் 25,000 ரூபாய் நிதியுதவியை அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (25). ஆட்டோ டிரைவரான இவர் மீது நிலத்தகராறு சம்பந்தமாக பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த புகாரின் பேரில் வீரகேரளம்புதூர் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசார் குமரேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன், இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்தார். இதனை அறிந்து கலைஞர் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவரும், மாநில திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் செல்லப்பா, பொதுக்குழு உறுப்பினர்கள் சுரண்டை சக்தி, காசிதர்மம் துரை, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கீழச்சுரண்டை முத்துக்குமார், வி கே புதூர் முன்னாள் செயலாளர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலைக்குமார், ஓய்வு பெற்றார் உளவுத்துறை உதவி ஆய்வாளர் வீராணம் பழனிச்சாமி, சுரண்டை பேரூர் கழக துணைச் செயலாளர் பூல் பாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டீபன் சத்யராஜ், சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பரமசிவம், கழக உறுப்பினர்கள் வேல்ராஜ், விக்னேஷ், கவிராஜ், முருகேசன், செல்வம், சுரேஷ், சண்முகவேல், ராஜதுரை, குலயநெரி ராஜேந்திரன், ஆனந்த் வடகரை ராமர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












