எல்லை பகுதியில் சீன ராணுவ தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.இந்நிலையில் எல்லையில் வீரமரணம் அடைந்த 20
ராணுவ வீரர்களுக்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால்த்துரை, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் சேர்மச்செல்வம், மோகன் ராஜ், அமைப்பு சாரா அணி பிரபாகர், வர்த்தக அணி சமுத்திரம், இலக்கிய அணி கந்தையா, ஊடகபிரிவு சிங்கராஜ், பரமசிவன், ராஜ்குமார், அரவிந்த், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.