தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் பிறந்த தினவிழா விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது.விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார், விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், விவசாய உபகரணங்களையும், வெண்டை மற்றும் மிளகாய் விதைகள் வழங்கி விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால் துரை மாவட்ட துணைத்தலைவர் பால் (எ) சண்முகவேல், சோனியா பேரவை பிரபு, தெய்வேந்திரன், நாட்டாண்மை ராமராஜ், சமுத்திர பாண்டி, முருகராஜ், ஊடகப்பிரிவு சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசல கணி, செல்வன், டயர் செல்வம், விஏஎஸ்.சமுத்திரம், செல்வராஜ், காந்திகுமார், ஆதிமுத்து, சமுத்திரம், மகாராஜா, ஞானசேகர், கந்தையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாயிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.