செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து தென்காசி மாவட்டம்
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். இடைக்கமிட்டி உறுப்பினர் கசமுத்து முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள் பெருமாள், செல்வராஜ், மோகன், மகாராஜா, மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் தம்பிதுரை நிறைவு உரை ஆற்றினார்.இதனைத் தொடர்ந்து செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளி அருகில் சிஐடியு வட்டார தலைவர் மாரியப்பன் தலைமையிலும், கீழபஜாரில் கட்டுமான சங்க வட்டார செயலாளர் கசமுத்து தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.