சுரண்டை அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்-வீ.கே.புதூர் தாசில்தார் அதிரடி..

சுரண்டை அருகே பள்ளி சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை வீரகேரளம்புதூர் தாசில்தார் தடுத்து நிறுத்தினார்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை அடுத்துள்ள தாயார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு, ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நபருடன் திருமணம் நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்தது.

திருமணம் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த நிலையில், இக் குழந்தை திருமணம் குறித்து அறிந்த வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் வீரகேரளம்புதூர் போலீசாருடன் சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்பெண் திருமண வயதை அடைய வில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோரிடம் உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!