நெல்லை சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நெல்லை சிந்துபூந்துறை மின்மயானத்தில் வைத்து மாலை நடைபெறுகிறது.இயல்பில் உதவும் மனம் படைத்த காவல் ஆய்வாளர் பெரியசாமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு கூட உணவில்லாத சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.