கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கொரோனா அரசியல் சூடு பிடித்து வரும் இச்சூழலில் வீட்டு
வாடகை வாங்க மறுத்த விவசாயி ஒருவரின் மனித நேயமிக்க செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக சுரண்டையை அடுத்த கீழச்சுரண்டையில் வீட்டு வாடகை வாங்காத மனித நேயரை பலரும் பாராட்டி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் திருமலை. மதிமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்துவருகிறார். 4 வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார்.இந்நிலையில் கொரோனாவை தடுக்க . 144 தடை உத்தரவு காரணமாக தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களிடம் (4 வீட்டிற்கும்) இம்மாதம் வாடகை வேண்டாம் என கூறி வாங்காமல் தன் பெருந்தன்மையை இயல்பாக நிரூபித்து உள்ளார்.விவசாயி ஒருவர், கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிந்து வீட்டு வாடகை வேண்டாம் எனக்கூறிய மனிதநேயமிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.