கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் கால்நடை சந்தைகள், வாரச்சந்தைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடும் ஆணைக்கு இணங்க கால்நடை துறை சார்பில் கால்நடை
சந்தைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் டாக்டர் தியோபிலஷ் ரோஜெர் மற்றும் தென்காசி கோட்ட துணை இயக்குனர் டாக்டர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் படி, வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டில் உள்ள ரெட்டியார்பட்டி கால்நடை சந்தை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சந்தை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும். சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் இந்த சந்தைக்கு ஆடு, கோழி, மீன், கருவாடு, காய்கறிகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதால் இங்கு 1000 ஆடுகள், 1500 கோழிகள், என வாரம் விற்பனை நடக்கும், மேலும் இதை விற்பவர்கள் வாங்குபவர்கள் என 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவது வழக்கம். எனவே இச்சந்தை நோய் தாக்கங்கள் குறைந்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என இப்பகுதி கால்நடை மருத்துவர் ராஜேஷ் தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.