தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே  சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் நடத்தினர். இதில் ஆண்கள் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தன்னெழுச்சியாக பங்கெடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி ,திரிகூடபுரம் , அச்சன்புதூர், வடகரை, வீராணம், செங்கோட்டை, பொட்டல்புதூர் ,மாலிக் நகர், தென்காசி, சாம்பவர்வடகரை, வல்லம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மணிக்கூண்டு அருகே ஒன்று திரண்டனர்.

பின்னர் அங்கேயே சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றை கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் செங்கை ஃபைசல் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜலாலுதீன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித் பொருளாளர் செய்யது மசூது,  துணை தலைவர் அப்துல்காதர் , துணைச் செயலர்கள் , ஹாஜாமைதீன், புகாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பொது பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் இதில் கலந்து கொண்ட அதிகமானோர் கொரானா வைரஸ் எதிரொலியாக முகங்களில் கவசம் அணிந்து இருந்தனர். மேலும், புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், உதவி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!