தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை இரத்தவங்கியும் இணைந்து நடத்தப்பட்ட இரத்தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹுத் ஜமாஅத் அனைத்து கிளை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனையில் செயல்படும் இரத்தவங்கியும் இணைந்து கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.இந்த இரத்ததான முகாமிற்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,மாவட்ட பொருளாளர் செய்யது மசூது ,மாவட்ட துணைதலைவர் அப்துல்காதர், மாவட்ட துணை செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜ், முன்னாள் சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் மீரான்மைதீன், சொக்கம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார பணியாளர் புன்னைவனம் ஆகியோர் கலந்து கொண்டு முகாம்மை தொடங்கி வைத்தனர்.மாவட்ட தலைவர் ஜலாலுதீன் கூறும் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தானத்தில் தமிழக அளவில் தொடர்ந்து முதலிடம் வகிப்பதை சுட்டிகாட்டி பேசினார்.மேலும் இரத்ததான முகாமில் கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் சுலைமான் , அப்துல்காதர் , பாரூக், சாகுல் கமீது, தேஷ்முகம்மது, அன்ஸாரி ,குல்லி அலி மற்றும் செயலாளர்கள் நிரஞ்சன் ஒலி ,பாதுஷா, முகம்மது அலி, பாதுஷா, ஹாஜாமைதீன், அல்தானி ,முகைதீன் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர்.தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கி டாக்டர் ஆன்ஷன் தலைமையில் மருத்துவகுழுவினர் இரத்த தானத்தை பெற்றுக் கொண்டனர்.இந்த இரத்ததான முகாமில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூர் ரத்ததான கழக தலைவர் யாத்ராபழனி, பூமாரி, கிருஷ்ணன் உட்பட 41 நபர்கள் இரத்ததானம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இரத்தவகை கண்டறியப்பட்டு இவர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்வது என மாவட்ட இரத்த வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த நபர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை மருத்துவர்அணி செயலாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









