கயத்தாறு அருகே விவசாய நீர் ஆதார பகுதியில் ஆபத்துகளை ஏற்படுத்தும் வகையில் தனியார் நிறுவன மின்கம்பம்-விரைந்து அகற்றிட விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா தென்னம்பட்டி கிராமத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாய் புல்வாய்குளம் உள்ளது.இந்தப் புல்வாய் குளத்தில் தனியார் காற்றாலை மின் கம்பங்கள்,சோலார் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, இந்தக் குளத்தின் உள்ளேயும் கரைகளிலும்,மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி கூறுகையில் விவசாயிகள் பயன்படுத்தும் குளம் நீர்நிலைகளில் மின் கம்பங்களை நட்டு சென்றால் இது விவசாயிகளுக்கு மிகவும் ஆபத்தாக முடியும் சூழல் உருவாகும்.விவசாயிகள் மகசூல்களை டிராக்டர் மூலமாக கொண்டு செல்வதற்கு கூட பாதை இல்லாத அளவிற்கு பாதையின் நடுவில் கூட மின் கம்பங்களை வைத்துள்ளார்கள்.

விவசாயத்தை அளிப்பதற்காகவே இந்த தனியார் நிறுவன சதி வேலை நடந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக விவசாய பூமியையும் குளங்களையும் அந்நியரிடம் அடகு வைப்பது மிகக் கேவலமாக உள்ளது. தென்னம்பட்டி புல்வாய் குளத்தை வந்து பாருங்கள் உள்ளே எத்தனை மின்கம்பங்கள் தனியார் காற்றாலை மின் கம்பம் உள்ளே தான் இருக்கிறது. சோலார் மின் கம்பங்களும் உள்ளே தான் இருக்கிறது. 60க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் குளங்களிலும்,குளத்தின் கரைகளிலும், நடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இடையூறாக,ஆபத்தாக உள்ள தனியார் நிறுவன மின்கம்பங்களை உடனே அப்புறப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம்.தவறும் பட்சத்தில் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்படும் என்றார் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ நாராயணசாமி.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!