மேட்டுப்பாளையத்தில் நடூர் மக்களுக்குஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை அடித்து உதைதத்து கைது செய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேட்டுப்பாளையம் நடூர் 17 தலித் உயிர்களை பறித்த
தீண்டாமை சுவருக்கு எதிராக போராடிய தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவனை காவல்துறை கடுமையாக தாக்கியுள்ளதையும், கைது செய்ததையும் கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ் புலிகள் கட்சி தென்காசி மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது மாநில தலைவரை தாக்கிய காவல் துறையை கண்டித்தும், தமிழக எடப்பாடி அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட கடையநல்லூர் ஒன்றிய செயலாளர்செல்வராஜ் ,இணை செயலாளர் கண்ணன் ,இளம்புலி செயலாளர் காளிதாஸ்,சொக்கம்ட்டி கிளை செயலாளர் முருகன் உட்பட 9 நபர்களை காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் கைது செய்தார். இதனால் 15 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.