மத்திய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்மையில் மத்திய அரசு
நிறுவனங்களான ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. பின், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை நவ.20 நேற்று ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் நமது நாட்டின் பெருமைகள். அவை தங்கப் பறவைகள். நாட்டை புதுப்பித்து கட்டுவதாக பாஜக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை நட்டமாக்கி, அவற்றை விற்கும் வேலையைத் செய்து கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ள அவர் இது வருத்தமான விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









