நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது விற்று வந்தவர்கள் கைது செய்யப்பட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பாளையங்கோட்டை உட்கோட்ட காவல்
உதவி ஆணையாளர் பெரியசாமி (சட்டம் & ஒழுங்கு) மேற்பார்வையில் இயங்கி வரும் தனிப்படையை சேர்ந்த, மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் விஜயகோல்டன்சிங் தலைமையில் நவராஜ் , சண்முகநாதன், மற்றும் ஆனந்த் ஆகியோர் 03-11-2019 ஆம் தேதியன்று, நெல்லை புதிய பேருந்து நிலையம், விநாயகர் கோயில் அருகே பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜலிங்கம் , மது பானங்களை சட்ட விரோதமாக அதிக விலைக்கு, விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில், ராஜலிங்கத்தை கைது செய்து, அவரிடமிருந்து 78 மது பாட்டில்கள் மற்றும் ரூ.3150/-ஐ பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









