புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் ‘கொரானா வைரசின் உயிரியல் தன்மை’ குறித்த இணைய வழி கருத்தருங்கு

கணினி மற்றும் அலைபேசி உதவியுடன் இணையதள வாயிலாக நேரு நினைவுக் கல்லூரியின் விலங்கியல் துறை பல கருத்தரங்குகளை மாணவ மேம்பாட்டுத் திட்டம் என்றப் பெயரில் நடத்தி வருகின்றது.இந்த வரிசையில், 06.05.2020 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ‘கொரானா வைரசின் உயிரியல் தன்மை’ என்றத் தலைப்பில் பேராசிரியர் சி. சுதாகரன், உயிர் தொழில் நுட்பவியல், மனோன்மனியம் சுந்தர்னார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கருத்துறை வழங்க்கினார். அவரது நீண்ட உரையில் கொரான வைரஸ் பற்றி கீழ்கண்டவாரு கூறினார்.

இந்த புது கரோனாவைரஸ் ஒரு RNA-வாலான மரபணுவாகக் கொண்டது. இந்த மரபணுவைச் சுற்றி சில புரதங்களைக் கொண்டுள்ளது, இந்த வைரஸ். இந்த மரபணுவும் சில புரதங்களையும் கொண்டது தான் இந்த வைரஸ்.இந்த வைரஸ் தம் மூக்குத் துவாரத்தின் மற்றும் நுரையீரலில் உள்ள செல்களின் மேல் அமர்ந்தால், உடனே இந்த வைரசின் RNA மரபணுவுடன் சேர்ந்து சில புரதங்கள் அங்குள்ள செல்களுக்குள் செல்கின்றது.நம் செல்கள் அனைத்துவிதமான RNA மற்றும் புரதங்களை உற்பத்திசெய்ய வல்லமை படைத்த கருவிகளைக் கொண்டுள்ளது.முதலில் உள்ளே நுழைந்த வைரஸின் RNA-க்களின் எண்ணிக்கையை நம் செல் பல கோடிகள் உற்பத்தி செய்கின்றது.இரண்டாவது இந்த வைரசின் புரதங்கள் உற்பத்தியாகி விட்டால் நம் செல்லுக்குள் பல கோடி வைரஸ்கள் உதயமாகும்.

ஒரு புரதத்தை உற்பத்தி செய்யத் தேவைப்படும் செய்முறைகள் இந்த RNA-யில் உள்ளது. வைரசின் RNA-யில் உள்ள செய்முறைத் தகவலின் படி அவைகளின் புரங்களை தம் செல்கள் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றது.நம் உடலில் உள்ள செல்களில் உற்பத்தி செய்யப்பட்ட வைரசின் RNA -வும் புரதங்களும் ஒன்று சேர்ந்து கோடிக்கணக்கில் புது வைரஸ்கள் உற்பத்தியாகுகின்றன. இந்த வைரஸ்கள் அந்த செல்லைக் கொன்றுவிட்டு வெளியேறுகின்றன. நம் உடலில் உள்ள மற்ற செல்லுக்குள் செல்கின்றன. இவ்வாராக தன் இனத்தைப் பல கோடி கோடிக்கணக்கில் அதிகரிக்கின்றன. நம் உடலிலுள்ள நம் செல்களே இந்த வைரஸ்களை உருவாக்குவதால் மருந்தின் மூலமாக இந்த நோயைக் குணப்படுத்துவது கடினம்.

தன் சுய நலத்திற்காக இந்த வைரஸ் இருமலை உண்டு பண்ணுகின்றது. இருமலால் வெளிப்படும் சிறு சிறு உமிழ் நீர்க் குமிழிகளில் இந்த வைரஸ் பல கோடிக்கணக்கில் வெளிப்படுகின்றன. இருமும் போது பல மீட்டர் தூரம் இந்த வைரஸ் உமிழ் நீர்க் குமிழிகளின் மூலம் சுற்றுப்புறத்தில் பரவ ஆரம்பிக்கிறது.வைரசில் உள்ள RNA மற்றும் புரதங்கள் சேதமடையாமல் இருக்கும் வரை தான் இந்த வைரசால் நோய்த் தொற்றை ஏற்படுத்தமுடியும். அந்த வைரசில் உள்ள இந்த பொருட்கள் சேதமடைந்தால் இதனால் ஒன்றும் செய்யமுடியாது. காற்றின் வெப்பநிலை மேலும் இந்த வைரஸ் அமரும் இடத்தின் பிற வேதித் தன்மையைப் பொருத்து இதன் சேதமடையும் கால அளவு மாறுபடும்.

நெகிழி (plastic), எவர்சில்வர் (Eever silver) பாத்திரங்கள் மற்றும் கருவிகள் மேல் இந்த வைரஸ் 72 மணி நேரங்கள் தன்னைக் காத்துக் கொள்கின்றன.மரத்தால் ஆன பொருட்களில் 24 மணிநேரமும், தாமிரத்தாலான பொருட்களின் மேல் 4 மணிநேரமும் இந்த வைரஸால் தாக்குப்பிடிக்க முடிகின்றது.பின் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகின்றது. தக்குதலுக்கு உள்ளானவர்களில் சுமார் 5 சதவிகித மக்களைக் கொன்று குவிக்கின்றன. இந்த வைரஸால் இறந்தவர்களில் வயதானவர்களும் மற்ற நோய்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும் தான் அதிகம். 10 வயதுக்கு உள்பட்டவர்கள் யாரும் இந்த வைரஸால் இதுவரை கொல்லப்படவில்லை.நம் செல்களுக்கு வெளியே இந்த வைரசால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. நம் உடலுக்குள் செல்ல வாய்ப்புக்களுக்காக கைகளில் மற்றும் நம் சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.அதனால் கைகழுவுதல் இன்றியமையாத ஒன்று மற்றும் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்துதல் வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டால் நமக்குத் தெரிய இரண்டு வாரங்கள் எடுக்கின்றது.

இந்த இரண்டு வாரக் காலத்தில் நோய்த் தொற்று பல மக்களுக்குச் சென்றடையும். எனவே அனைவரும் வீட்டில் தனிமைப்பட்டால் இந்த நோயை எளிதில் கட்டுப்படுத்தலாமென்று விரைவாக எடுத்துரைத்தார்.மேலும் நோய் பாதிக்கப்பட்டு குணமாவர் நோய் உள்ளவருக்கு இரத்தம் கொடுத்தால்(பிளாஸ்மா தெரபி) அவருக்கு நோய் எதிப்பு சக்தி அதிகமாகி கொரன வைரஸை விரைவில் அளிக்கும் என்று பேசினார்.முன்னதாக கல்லூரி தலைவர், பொன். பாலசுப்ரமனியன், செயலர் பொன். இரவிச்சந்திரன், முதல்வர் பொன்பெரியசாமி மற்றும் துறைத்தலைவி முனைவர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முனைவர் க. சரவணன் அனைவரையும் வரவேற்றார். முனைவர் க. ரேவதி நன்றியுரையாற்றினார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!