புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைப்பெற்ற “ NMC Maths 2020 ” என்ற கணிததிறன் போட்டி.

நேரு நினைவுக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைப்பெற்ற “ NMC Maths 2020 ” என்ற கணிததிறன் போட்டியில் 120க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கணிதத்துறைத்தலைவர் திருமதி.பி.பாக்கியலெட்சுமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர்அ.இரா.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புலத்தலைவர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் கணிதவியல் ஒளிப்பட விளக்க காட்சி, கணித வினாடி வினா, கணித அதிசயம், மனக்கணிதம், கணித ஜாம்பவான், கோலத்தில் கணிதம் மொத்தம் ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 17 கல்லூரிகள் கலந்துக்கொண்ட போட்டிகளில் ஓட்டு மொத்த வெற்றியாளாராக ஜமால் முகமது கல்லூரி, திருச்சி முதலிடமும், சீதாலெட்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி இரண்டாம் இடமும் பெற்றனர்.மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணிய ன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.அ.இரா.பொன்பெரியசாமி அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக கணிதத்துறை பேராசிரியர் திருமதி.சி.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவுற்றது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!