முதுநிலை நீட் தேர்வு 2024 ,வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

முதுநிலை நீட் தேர்வு 2024 , வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

முதுநிலை நீட் தேர்வின்(2024) தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இளநிலை நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல், எம்எஸ் மற்றும் எம்டி போன்ற முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, முதுநிலை  நீட் தேர்வை எழுதுகின்றனர்.

இதற்கான தேர்வு வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட்  தேர்வு 2024 வரும் ஜூலை  7 ஆம் தேதி நடைபெறும்  என்று  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுதிய மாணவர்களின் கட் ஆப் குறித்த விவரங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!