அதிமுக அரசு மத்திய அரசினுடைய அடிமையாக இருக்கிறது; உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

நீட்தேர்வு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் நேரில் சென்று அவர்களது பெற்றோர்களும் ஆறுதல் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பாக 5 லட்ச ரூபாய் நிதியுதவி அவர்களிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

துயரமான நிகழ்ச்சி இது, மாணவி துர்கா நாளை நீட்தேர்வு இருக்கும் பொழுது மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை தேர்வு எழுத முடியாமல் ம மருத்துவராகும் கனவு தகர்ந்து விடும் என்று உயிரைப் போக்கி உள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இது சமமற்ற சம வாய்ப்பு இல்லாத ஏழை மாணவர்களுக்கு மருத்துவராக தடுப்பதே இந்த நீட் தேர்வு என திமுக கூறி வருகிறது. கலைஞர் ஏற்கனவே இதுபோன்ற நுழைவு தேர்வை நீக்கினார்.கலைஞர்,ஜெயலலிதா இருக்கும் பொழுதும் நீட்தேர்வு வரவில்லை.ஆனால் தற்போது அதிமுக அரசு மத்திய அரசினுடைய அடிமையாக இருக்கிறது. ஆண்டுதோறும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள் இதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரியலூரில் விக்னேஷ் என்கின்ற மாணவன் இதேபோன்று நீட் தேர்வு எழுத முடியாமல் தற்கொலை செய்து கொண்டான். திமுக தொடர்ந்து கண்டிக்கிறோம்.தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முதல்வர் கூறுகிறார். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை சொல்வதற்கு எதற்கு முதலமைச்சர் இதை ஒரு மருத்துவர் செல்லலாம் இதற்கு முதலமைச்சர் தேவை இல்லை. ஆட்சியை காப்பாற்றுவதற்காக டெல்லி சென்று அதிகமாக பிரதமரை சந்தித்து வருகின்ற முதலமைச்சரும் அமைச்சர்களும் செல்கிறார்கள். ஆட்சி கையில் வைத்திருந்த இதை கூட செய்யவில்லை என்றால் இதற்கு ஏற்கனவே ஒருத்தர் சொன்னார் இம்போட்டண்ட் ஆட்சி என்று அது இப்போது உண்மையாகி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதேபோன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்தது ஆனால் மாணவர்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்திய விளைவாக ஒரேநாளில் டெல்லியில் மெரினா போராட்டத்தை முடித்து வைத்தார்கள் அப்போது செய்ய முடிந்த அரசு இப்போது செய்ய முடியாதா.
மாணவர்கள் தெம்பாக இருங்கள் தைரியமாக எழுதுங்கள் 8 மாதத்தில் ஆட்சி மாறும் நல்ல முடிவு இருக்கும் என்றார்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!