மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவசிலைக்கு தமிழ் வழி நாய்டு மக்கள் பேரவையின் தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்கள் தலைமையில் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு பண்டைய கால பாரம்பரிய முறைப்படி 400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் ஜெயந்தி விழா அன்று அரண்மனையில் எவ்வாறு மரியாதை செலுத்தப்பட்டதோ, அதேபோன்று வரலாற்றை மீட்கும் வகையில் அவரின் திரு உருவ சிலைக்கு தங்க கிரீடம் வைத்து, செங்கோல் கொடுத்து, பூஜைகள் செய்யப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்வில் பேரவையின் பொதுச் செயலாளர் சபரி ராஜன், மாநில பொருளாளர் ராஜசேகர் மற்றும் பேரவையின் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

You must be logged in to post a comment.