இராமநாதபுரம் மாவட்டம பாம்பன் மீன்பிடிதுறைமுகத்தில் மீனவர்கள் அந்தோணி, மியோன், வின்தாஸ், ஸ்டீபன் ஆகியோர் ஜூலை 4 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது காற்று வேகத்தால் மீனவர் 4 பேரும் மாயமாகினர். இதில் இரண்டு மீனவர்கள் ஜூலை 8 ஆம் தேதி மீட்கப்பட்டனர். மியோன், வின்தாஸ் ஆகியோரது உடல் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குஇராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனிநேரில் ஆறுதல் கூறினார் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 50 ஆயிரம் வழங்கினார்.
தமிழக அரசு தலா ரூ10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், மீனவரின் குடும்ப உறுப்பினருக்கு அரசு பணிவழங்க வேண்டும்.இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளால் மாயமாகும் மீனவர்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ் கனி எம்பி.,
கோரிக்கை விடுத்தார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









