கொரோனா லாக்டவுன் உலகத்தையும், மக்களையும், மக்களின் வாழ்கை முறை அனைத்தையும் புரட்டி போட்டு விட்டது என கூறலாம். மனிதனுக்கு அண்டைவீட்டாருடனும், சொந்தகாரனுடனும் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. பல வருடங்களாக தொடர்பில்லாத உறவுகளுடன் மனம் விட்டு பேச வாய்ப்பை கொடுத்துள்ளது.
ஆனால் இந்த ஊரடங்கு மனிதனை கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தியது. ஆனால் இயற்கையோடு இணைந்து வாழும் பறவைகளுக்கும் உயிரிடங்களுக்கும் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. ஆம், இயற்கை வளங்களை விரும்பியது போல் சுற்றி அனுபவித்து வருகிறது பறவைகளும், மிருகங்களும்.
இதற்கு உதாரணம்தான் லாக்டவுன் காலத்தில் மதுரை புதூர் பகுதியில் நிறுத்தி வைத்த இரண்டு சக்கர வாகனத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த விசிறி வால் குருவி சம்பவம். இப்பகுதியில் கடந்த இரண்டு மாத காலமாக வண்டியை எடுக்காமல் ஓரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். நிறுத்தி இருந்த வண்டியின் மீது தினமும் குருவியும் கீச் குரலுடன் தினமும் சுற்றி வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வீட்டு சிறுவர்களும் குருவிக்கு தொந்தரவு அளிக்காமல் பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையல் இரண்டு சக்கர வாகனத்திலேயே இரண்டு குஞ்சு பொறித்துள்ளது. இதானல் அவ்வீட்டின் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து அந்த வீட்டில் இருந்த சிறுவன் தியானேஷ்வரன் கூறும் போது, கொரோனா காலத்தில் நாங்கள் வீட்டில் இருக்கும் போது தான் குருவிகள் அதிகமாக வரத்தொடங்கின. உடனே நாங்கள் அந்த குருவிக்கு சாப்பாடு போட்டோம். அதில் கருப்பாக பார்க்க அழகாக இருந்த 2 குருவி மட்டும் எனது அம்மாவின் மொபட் வண்டியை சுற்றி சுற்றி வந்தது.
உடனே நான் போய் பார்த்த போது அதில் குருவி கூடு கட்டி கொண்டிருப்பதை கண்டேன். உடனே வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்து அந்த வண்டியை எடுக்க கூடாது என்று கூறினேன். அதற்கு எனது அம்மாவும், அப்பாவும் சம்மதம் தெரிவித்தனர். இப்பொழுது சாதாரண காலத்தில் பார்க்க முடியாத விசறி வால் குருவி என்பதை அறிந்த பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.” என மகிழ்ச்சியுடன் கூறினான்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












