அறிவோம்.. பக்கவிளைவு இல்லா வீட்டு மருத்துவம்…

நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய  ஆரம்பிக்கும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில்  உள்ள அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.

சிலருக்கு முன், பின் கழுத்து கருமையாக காணப்படும். இதைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்  பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் மாறி இயற்கை நிறம் வந்துவிடும்.

வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு அடையும். முக அழகை கொடுக்கும். தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுகள், துளசி இலைச்சாறை சேர்த்து தடவி வரவேண்டும்.

முகத்திற்கு ஒப்பனை போடுவதற்கு முன் லேசாக முகம் முழுவதும் பன்னீர் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும்.  நீண்ட நேரம் ஒப்பனை (Make up) கலையாமலும் இருக்கும்.

உப்பு கலந்த எலுமிச்சம்பழச் சாறை பற்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை மறையும், ஈறுகளில் உள்ள கறை மறையும்.  ஈறுகள் பலம் பெறும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!