இராமநாதபுரம் மாவட்டத்தில் தரை வழியாக காஸ் விநியோகத் திட்டம் நவ.22 ல் துவங்கி வைக்கப்படுகிறது என ஏஜி அண்ட் பிஎன்ஜி மார்கெட்டிங் நிறுவன தலைவர் கார்த்திக் சததியமூர்த்தி கூறினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் 7 பகுதிகள் உள்பட இந்தியாவின் 63 பகுதிகளில் நகர் காஸ் விநியோக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இத்திட்ட செயல்பாட்டால் லட்சக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எளிதாக பயனபடுத்தக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத இயற்கை காஸ் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். இந்தியாவின் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 129 மாவட்டங்களை உள்ளடக்கிய 92 பகுதிகளில் நகர் காஸ் விநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக நாட்டின் 11 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளில் 20 சதவீத மக்கள் பலன் அடைகின்றனர். மேலும் 50 மாவட்டங்களில் நகர் காஸ் விநியோகத்திட்டம் அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் நகர் காஸ் விநியோக உரிமம் பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் – ஏஜி அண்ட் பி எல்என்ஜி மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், அட்லாண்டிக் கல்ப் அண்ட் பசிபிக் கம்பெனி (மணிலா ) , திருப்பூர், கடலூர், நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் – அதானி காஸ் பிரைவேட் லிமிடெட், கோவை, சேலம் மாவட்டங்கள் – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், சென்னை, திருவள்ளுர் மாவட்டங்கள் – டாரண்ட் காஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் தமிழகத்தில் நகர் காஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுவரை எரிவாயு இணைப்பு இல்லாத குடியிருப்புகள் , வணிக நிறுவனங்களுக்கு தூய காஸ் விநியோகம் வழங்கப்படும். தரை வழி காஸ் விநியோக பயன்பட்டால், தற்போதைய சமையல் காஸ் சிலிண்டர் விலையில் இருந்து சரிபாதி கட்டணம் மிச்சமாகும். வாகனங்களுக்கு பயன்படுத்துவதால் 40 முதல் 50 சதவீத கட்டணம் மிச்சமாகும். இத்திட்டம் இன்னும் 6 மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வீடுகளுகளுக்கு தரை வழி காஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்படும் போது உள்ளூர்வாசிகள் 2 ஆயிரம் பேருக்கு நேர்முக, மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். இணைப்பு ஒன்றிற்கு தோராயமாக ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகை வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நகர் காஸ் விநியோக உரிமம் 8 ஆணடுகளுக்கு ஏஜி அண்ட் பி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தரை வழி எரிவாயு விநியோக திட்டத்தை ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா எம்.பி., நவ.22 இல் துவக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். உதவி துணை தலைவர் திவாகர் பெதுன், ஊடகத் தொடர்பாளர் வினோத் உடனிருந்தனர்.


You must be logged in to post a comment.