செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுக்கரை ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ்
வழங்கினார்.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுக்கரை ஊராட்சியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அன்றாடத் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் 800 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி சார்பாக வழங்கி தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் செம்பை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.