இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின்படி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். மேலும் 112 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 1,83,62,412/-ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரத்து நானூற்றி பன்னிரெண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாட்டினை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தார்.

You must be logged in to post a comment.