இராமநாதபுரத்தில் தேசிய பசுமைப்படை மரக்கன்று நடும் விழா..

இராமநாதபுரம் கல்வி மாவட்டம். ரெகுநாதபுரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா, கருத்தரங்கம் 27.10.2018 அன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளிந நிர்வாக அலுவலர் அ.ஜேக்கப் , முன்னிலை வகித்தார்.

இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் தலைமை வகித்தார். புதிய மாணவர்களுக்கு தேசிய பசுமைப்படை பேட்ஜ் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் உறுதிமொழி, டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி மாணவர்கள் ஏற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் கனிமொழி செய்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!