இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து இன்றைய தினம் காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார். குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார்கள். நிகழ்ச்சியில் பரமகுடி நுகர்வோர் சங்கத்தின் தலைவர் கே.ஜே மாதவன் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இளங்கோ கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கருத்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முத்துசாமி, செந்தில்குமார் இருவரும் கலந்து கொண்டு உணவு கலப்படம் பற்றிய விழிப்புணர்வை செய்முறையில் மாணவர்கள் மத்தியில் காண்பித்தார். நிகழ்ச்சியில் துணை தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்களும் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி தங்கச்சிமடம் நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் ஜான் போஸ், பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயலாளர் சத்திய பிரியா நன்றி கூறினார்கள்

You must be logged in to post a comment.