இராமநாதபுரத்தில் நாடார் மக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா ராமநாதபுரம் ஜி எஸ் மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சுப.கே.காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் நாடார் மக்கள் பேரவை நிறுவன தலைவர் கராத்தே எ.பி.ராஜா கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது இராமநாதபுரம் ஈசிஆர் ரோட்டில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி பதநீர் இறக்க அனுமதிக்கப்பட வேண்டும் பாண்டிச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் கள் இறக்க அனுமதிக்கப் படுவது போல் தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அழிந்து வரும் பனை தொழிலை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், மாநில கிராம உதவியாளர் சங்க நிர்வாகி தங்கராஜ், களரி தியாகராஜன், நாடார் மக்கள் பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்ரா, மாவட்ட பொருளாளர் கண்ணன் மேற்கு மாவட்ட தலைவர் காந்தி, மாவட்ட ஆலோசகர் முத்துமணி கிழக்கு மாவட்ட துணை தலைவர் டேவிட் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணதாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் மார்க்கண்டன் மாவட்ட துணை பொதுச்செயலாளர் திவாகரன் என்ற மாரிமுத்து மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜான்சன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் கர்ணா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் உதயகுமார், திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் ராகவன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார் நன்றி கூறினார்.



You must be logged in to post a comment.