கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள் சேர்க்கும் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA)..

கேரளா மாநிலம் கடந்த இரண்டு வாரங்களாக இயற்கையின் சீற்றத்தினால் 14கும் மேற்பட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கி, அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அம்மக்களுக்கு உதவும் வகையில பல தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் பல வகையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பான “NASA ” அமைப்பு அம்மக்களுக்கு நிவாரணப் பொருள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வமைப்புக்கு நிவாரணப் பொருட்களை அளிக்க விரும்புபவர்கள் 9976745446/ 9952637233 / 9043524681 என்ற எண்ணுக்க அழைத்தால் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வார்கள். இதில வசூல் செய்யப்படும் நிவாரணப் பொருட்கள் பெருநாட்கள் கழிந்தவுடன் பாதிக்ப்பட்ட இடங்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க  முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!