கேரளா வயநாடு நிலச்சரிவு பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு பணிகளுக்காக கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( நாசா) நிதி உதவி வழங்கியது .
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு , பணியில் முண்ணனியில் செயல்படும் கேரளாவை சார்ந்த *பீப்புல்ஸ் ஃபவுண்டேஷன்* அமைப்பின் வயநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.கே .சமீர் அவர்களிடம் , நாசா அமைப்பிற்கு நல்லுள்ளங்கள் வழங்கிய வயநாடு நிவாரண உதவித் தொகை ₹ 2,55,000 /- ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கான காசோலையை *நாசா* நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் நாசா அமைப்பின் தலைவர் முஸம்மில் இப்றாஹிம் , பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹுசைன் , நிர்வாகக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது ( வெள்ளை ) , நாசா முன்னாள் தலைவர் நல்ல இப்றாஹிம் மற்றும் மூத்த உறுப்பினர் சலாஹுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் பீப்புல்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பினர் முன்னர் பல்வேறு துயரங்களில் பாதிக்கபட்ட மக்களுக்கு புதிதாக கட்டி கொடுத்த வீடுகளையும் தற்போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்த பணிகளையும் நிர்வாகிகள் பார்வையிட்டனர் ..
You must be logged in to post a comment.