தூத்துக்குடி மாவட்டங்களில் (NASA) அமைப்பின் நிவாரண பணிகள்.. 

தூத்துக்குடி மாவட்டங்களில் கீழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த  (NASA- வடக்குத் தெரு சமூக நல அமைப்பு – North Street Association for Social Activities) அமைப்பினர்  நிவாரணப் பணிகளை திறம்பட நிறைவு செய்து திரும்பியுள்ளனர்.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்றபட்ட துயர்களை போக்கும் வண்ணம் குழு அமைக்கப்பட்டு ,  அதன் மூலமாக ரூ.1,26,720 வரை  நிதி் திரட்டப்பட்டது.
இந்த நிவாரண தொகை மூலம் நிவாரணப் பொருட்கள் அடங்கிய  மளிகை சாமான்கள் மற்றும் துணி மணிகள் அடங்கிய  185 பெட்டிகள் தயார் செய்யப்பட்டு NASA ஆம்புலன்ஸ் மூலம்  குழுவினர்  காயல்பட்டினம் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஐக்கிய பேரவை நிர்வாகி அன்சாரி  வழிகாட்டுதலுடன் நிவாரணப் பணியை  திறம்பட செய்து முடித்தனர்.
இந்த பணிக்காக உழைத்த நாசா மதரஷா (அல் மதரஸத்துல் முஹம்மதியா) மாணவர்கள், நாசா தன்னார்வ தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் நாசா நிர்வாகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!