கீழக்கரை வடக்குத் தெரு மத்ரஸசத்துல் முஹம்மதியாவில் மாதம் தோறும் மாணவர்களின் வருகை, செயல்பாடுகள் மற்றும் இன்ன பிற செயல்களை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் நவம்பர் மாதத்திற்கான பரிசளிப்பு விழா 08-12-2017, அன்று வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பில் இஷா தொழுகைக்கு பிறகு மதர்ஷாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதரஸாவில் பயிலும் மாணவர்களின் ஒழுங்கு முறை பற்றியும், பெற்றோர்களிடம் கருத்தும்
கேட்கப்பட்டது. பின்னர் கிராத், குர்ஆன் விளக்கம் போன்ற நிகழ்ச்சியில் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் நாசா (NASA) மூத்த நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
புகைப்படத் தொகுப்பு:-




You must be logged in to post a comment.