கீழக்கரை நகராட்சியின் உச்சக்கட்ட மெத்தனப் போக்குக்கு எடுத்துக்காட்டு வெட்ட வெளியில் கிடந்து நாறிக் கொண்டிருக்கும் “நம்ம டாய்லெட்” திட்டத்திற்காக வந்த நவீன கழிப்பறைகள். இது சம்பந்தமாக பல பதிவுகளும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகள் கேள்வி கனைகள் தொடுத்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இது வரை இல்லை.
கீழக்கரை நகரும் சுகாதாரத்தில் இன்னும் பின் தங்கிய நகர் என்றே கூறலாம். இன்னும் எவ்வளவோ பகுதிகளில் எத்தனையோ மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக உபயோகிக்கும் அவலம் நடந்தது கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு அவலங்களும் கண் முன்னே அப்பட்டமாக தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் வீணாகாமல் மாற்று ஏற்பாடு செய்ய தயங்குவதின் காரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அதே போல் பல லட்சம் செலவில் கடற்கரை நடைபாதை அமைத்தாலும், அங்கே அவசரத்திற்கு கழிப்பிட வசதி கிடையாது. நகராட்சி பொதுமக்களின் பல லட்சம் முழுமையாக நாசமாகும் முன் விழத்துக் கொள்ளுமா?? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் …



Vry bad take action immediately