கட்டாத வீட்டிற்கு கட்டடம் கட்டிய அதிகாரிகள்-நாமக்கல்லில் 12 வருடமாக நீதிகேட்டு அலையும் விவசாயி.!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை இருகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சபாளையம் கிராமத்தை சார்ந்தவர் முருகேசன். இவர் விவசாயியாக பணிசெய்து வருகிறார். இவர் குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த 2010 ஆம் வருடத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு வழங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் கான்க்ரீட் வீடு பெரும் தகுதிக்கான அட்டையினை விண்ணப்பித்த நிலையில், அடிப்படை பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இதற்காக அஸ்திவாரம் அமைக்கும் பணியினை முருகேசன் மேற்கொண்டுள்ள நிலையில், கடனை வாங்கி அஸ்திவார பணிகளை முடித்துள்ளார்.
பின்னர் வீடு கட்டுவதற்கு நிதி வரும் என்று காத்திருந்த நிலையில், மூன்று மாதம் மூன்று வருடங்களாக சென்று பலனில்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், தற்போது 9 வருடங்கள் கழித்தும் முருகேசனுடைய வீடு கட்டுவதற்கு நிதி வராமல் இருந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அதிகாரியை சென்று சந்தித்த முருகேசனிற்கு பெரும் அதிர்ச்சியாக, வீடு கட்டி கொடுக்கப்பட்டதாக கூறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான முருகேசன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு சென்று விஷயத்தை கூறி தனது இல்லத்தினை கண்டறிந்து தரும்படி புகார் மனுவை வழங்கியுள்ளார். இதனை ஏற்று தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வட்டாட்சியரின் கவனத்திற்கு புகார் வந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









