கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் வருங்காலத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அன்று நடைபெற்ற இராம இராஜ்ஜிய ரத முற்றுகை போராட்ட்ததை சிலர் மத சாயம் பூசுவதையும் ,தேவைற்ற செயல் என்பதுபோல் விமர்சிப்பதை காணமுடிந்தது, இதனால் ஒற்றுமையுடன் செயல்பட்ட பிற சமுதாய மக்களிடையே மனக் கசப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து வருகிறது.
இது சம்பந்தமாக கீழக்கரை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்த ரத யாத்திரை வழிபாட்டிற்காக வருமாயின் அதை தடுக்க வேண்டிய அவசியமில்லை. இராம இராஜ்ய ரதம் வரும் நோக்கம் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டவேண்டும், வியாழக்கிழமை இந்திய முழுமைக்கும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் போன்ற மத ரீதியான சிந்தனையை உருவாக்கி இந்தியாவின் ஒருமைபாட்டை சிதைக்கும் நோக்கத்தோடு வருகிறது.
தமிழ்நாடு எப்போதும் தனித்துவம் வாய்ந்த மாநிலம். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் எப்போதும் திகழ்கிறது. உதாரணமாக ஏர்வாடி சந்தன கூட்டை இந்துக்கள் துவக்கி வைப்பதும், இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் வழியனுப்பி வைப்பதும் போன்ற எண்ணற்ற உதாரணங்களை இங்கு நாம் சொல்ல முடியும்.
தமிழர்கள் தங்கள் வழிபாட்டிற்காக இஸ்லாம், கிருஸ்த்தவம் போன்ற மதங்களை ஏற்று நின்றாலும் அவர்கள் மொழியாலும், இனத்தாலும் தமிழர்கள் . தமிழர்களின் சகோதரத்துத்தை சிதைக்கும் எந்தவொரு நிகழ்வையும் தடுத்து நிருத்த வேண்டியது அனைத்து தமிழர்களுக்கான கடமை. இங்கே அமைதியை சீர்குலைக்கும் எந்த செயலையும் நாம் அனுமதிக்க முடியாது. “வெல்க தமிழர் ஒற்றுமை” என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









