மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை அருகே, மைக்கேல்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, மைக்கேல்பாளையத்தில் தமிழக அரசு சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு நிலக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அலுவலர் சிவக்குமார், கோட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகந்தா கரிகாலபாண்டியன், மைக்கேல்பாளையம் அருட்தந்தை வின்சென்ட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கோட்டூ ஊராட்சி மன்ற செயலர் பாண்டியராஜன் வரவேற்றார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.கே.பி.கரிகாலபாண்டியன் பொதுமருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கர்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முகாமில் ஸ்கேன், எக்ரே, ஈசிஜி, இரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட முழு உடல்பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தேவைப்படுவோருக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கபட்டது. மேலும், முகாமில் மாவட்ட திமுக சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் ஜான்போஸ்கோ, அம்மையநாயக்கனூர் பேரூர் திமுக செயலாளர் ராஜாங்கம், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர்கள் மலையாளம், அவையம்பட்டி கந்தபிரபு உட்பட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கழக நிர்வாகிகள் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

You must be logged in to post a comment.