திருநகரி ஊராட்சியில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அன்பன் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வரும் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி ஊராட்சியில் மிகுந்த சிரமத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சென்னையை சேர்ந்த Team Trans logistics Pvt Ltd என்ற நிறுவனம் சார்பில் ஐந்து நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள திருநகரி கிராம மக்கள், இந்த உதவி கிடைக்க வழிவகை செய்த அன்பன் அறக்கட்டளை நிறுவனர் கவி மோகனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இரா. யோகுதாஸ்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!