நாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.

நாகை மாவட்டம் சேர்ந்த இ.ஜி.எஸ்பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பயிலும் மாணவர் சபரி நாதன்.மீனவ குடும்பத்தை சேர்ந்த சபரிநாதன் ஒரு கிலோ எடையுள்ள இரும்புச்சங்கிலியால் தன் ஒரு கையை கட்டிக்கொண்டு மற்றொரு கையை மட்டும் பயன்படுத்தி நீந்தி வேளாங்கண்ணி முதல் அக்கரைப்பேட்டை வரை 7.215 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 24 நீந்தி நீந்தி சாதனை படைத்தார். இவரது இந்த சாதனை முயற்சியானது 22.08.2019 வியாழக்கிழமை அன்று காலை சரியாக 8 மணி 4 நிமிடம் அப்பொழுது துவங்கப்பட்டது.

.அன்று முற்பகல் 11 மணி 37 நிமிடத்தில் சபரி தன் சாதனையை நிறைவு செய்தார். இந்த சாதனையை T.K. ராஜசேகரன்  துவங்கி வைத்தார்கள். சபரிநாதன் கடலில் நீந்துவதை வில் மெடல் நிறுவனத்தின் தலைவர் Dr. கலைவாணி, முதன்மைச் செயலர் Dr.தஹ்மிதா பானு, ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் பெரிய படகுகளில் இருந்து 3.24 மணி நேரமும் கண்காணித்தனர். சாதனை படைத்த சாதனையாளர் சபரி நாதனுக்கு இ.ஜி.எஸ் பிள்ளை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய ஊர் இளைஞர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அன்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபரிநாதன் உலக சாதனை சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார்                  கையால் பெற்றுக்கொண்டார்.நாகை மாவட்ட ஆட்சியர்  சாதனைபடைத்த மாணவன் சபரிநாதனால் நாகை மாவட்டத்திற்கே பெருமை.இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிறப்பாக செயல்படும் வில் மெடல்ஸ் அறக்கட்டளைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!