பத்து நாட்களாக உணவின்றி தவிக்கும் 10 வேடர் இன குடும்பங்கள்

இந்தியா முழுவதும் 10 வது நாளாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இன்று. தமிழகத்தில் சுகாதார பணிகள், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் கொரானா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை மற்றும் ரேசன் பொருள்கள், குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 1000/- என வழங்கி வரும் நிலையில். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் சுமார் 10 வேடர் இன குடும்பங்கள், தனிநபருக்கு சொந்தமான் இடத்தில் சுமார் 50 வருடங்களாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

சாதாரணமான நாட்கள்களிலே இவர்களுக்கு உணவு என்பது அரிதுதான்.ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக ஒரு வேலை உணவு கூட இன்றி இவர்கள் தவித்து வருகின்றனர், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் ரேசன் பொருள்களும் இவர்களுக்கு இல்லாமல், உணவுக்காக ஏங்கி நிற்கின்றனர். இவர்களுக்கு இதுவரை குடும்ப அட்டை, ஆதார் , தேர்தல் அடையாள அட்டை, ஒரு இந்தியாவில் தான் வாழ்கிறார்கள் என்ற எந்த அடையாளமும் இவர்களுக்கு இல்லை.அரசின் எந்த உதவியும் இவர்களுக்கு கிடைப்பதில்லை, கூலி வேலை என்பது நெல், உளுந்து அருவடை நாட்களில் என்பதால், இவர்கள் கூலி வேலைக்கு சென்றால்தான் ஒரு வேலை உணவு என்ற நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ளதால் ஒரு வேலை உணவிற்காக காத்துநிற்கின்றனர், இவர்களுக்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் இவர்களின் கோரிக்கையாக பல வருடங்களாக இருக்கிறது.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!