அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் கையெழுத்து இயக்கத்தை நகர காங்கிரஸ் தலைவர் எஸ் கேடி ஜெயபால் தலைமையில் மாவட்ட தலைவர் எஸ் பழனி நாடார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் பால்துரை, மாவட்ட துணை தலைவர் பால் (எ) சண்முகவேல், மாவட்ட செயலாளர் ஏகேஎஸ் சேர்மசெல்வம், சோனியா பேரவை பிரபு, ஊடக பிரிவு சிங்கராஜ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா, செல்வராஜ், அருணாசலக்கனி, சமுத்திரகனி, கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் சமுத்திரம், டயர் செல்வம், கந்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுரண்டையில் புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக காங்கிரசார் கையெழுத்து இயக்கம்..
விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் மாநில தலைவர் அழகிரி ஆலோசனையின் பேரில் நடந்து வருகிறது. நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் தென்காசி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்று வருகின்றனர்.

You must be logged in to post a comment.