தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி கருத்தரங்கம் – துணை முதல்வர் பங்கேற்பு..

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கி சார்பில் சென்னை தனியார் ஹோட்டலில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கருத்தரங்கம் மூலம் தமிழகத்தின் பல்வேறு துறைகளுக்கு தேவையான நிதி உதவியை செய்துவது குறித்து ஆலோசிக்கபடுகிறது. மேலும் ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் அந்தந்த துறைகளின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும் துறையின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்வி துறை செயலர் பிரதீப் யாதவ், நிதி துறை செயலாளர் சண்முகம், நபார்டு வங்கி பொது மேலாளர் பத்மா ஜகநாதன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!