சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது;
கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும்.நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்.இந்திய நாட்டை பாஜக தான் ஆள வேண்டும் என மோடிக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?நாட்டை நாங்களும் ஆட்சி செய்யலாம்.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரசுக்கு ஒட்டு போட்டால் ஒரு கஷ்டமும் தீராது. மக்களுக்காக போராட சீமான் வேண்டும். ஆனால் ஓட்டு மட்டும் வேறு ஒருவருக்கு. ஊழலும், லஞ்சமும் தேசியமயமாக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்துதான் ஊழல், லஞ்சத்திற்கான விதையே பிறக்கிறது. கோடிகளைக் கொட்டி வென்று வருபவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்களா? இல்லை, நான்கு மடங்கு சம்பாதித்துக்கொள்ள வருவார்களா?
வழக்கம்போல எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலையும் கடந்து போகாதீர்கள். ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே விட்டால் இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும்.கிளி போன்று கூண்டுக்குள் சிக்காமல் எதிர்காலத்தை பற்றி அனைவரும் சிந்தியுங்கள்.உரிமை இருந்தும் திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்?ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நாங்கள் சாதித்தோம்.
10 ஆண்டுகளாக ஆண்ட மோடி என்ன செய்து விட்டார்? ஏழ்மையை ஒழிப்போம் என ஏழைகளை கொன்று விடுவார்கள்.எந்த மாநிலத்திற்கும் காங்கிரஸ், பாஜக தேவையில்லை.பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ்.பாஜகவிடம் ஓட்டு பெட்டி, நோட்டு பெட்டி என 2 பெட்டிகள் உள்ளது.சின்னத்தை மாற்றி சீமானை சிதைக்க முடியாது.
வலிமை மிக்க வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள்.இந்த நாட்டில் யாரும் சிறுபான்மை, பெரும்பான்மை கிடையாது.நரிகளுக்கு இடம் கொடுத்து நதிநீர் உரிமை உள்பட எல்லா உரிமையையும் இழந்தோம் என கூறியுள்ளார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









