மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம்!- சீமான் சீற்றம்..

பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!